செய்திகள்

சபரிமலை தீர்ப்பு விவகாரம் - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கண்டித்து கேரளாவில் நாளை சிவசேனா முழு அடைப்பு

Published On 2018-09-30 17:28 IST   |   Update On 2018-09-30 17:28:00 IST
சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கண்டித்து கேரளா முழுவதும் நாளை கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் அறிவிப்புக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சபரிமலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து நாளை (1-ந் தேதி) கேரள மாநிலம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள மாநில சிவசேனா தலைவர் புவனச்சந்திரன் கூறியதாவது-

ஒவ்வொரு கோவிலுக்கும், ஒரு பழக்க வழக்கம் உள்ளது. அதேபோல் சபரிமலை கோவிலுக்கென உள்ள பாரம்பரிய பழக்கவழக்கங்களை சுப்ரீம் கோர்ட் கவனத்தில் கொள்ளவில்லை. இது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதனை கண்டித்து இந்த கடை அடைப்பு போராட்டத்தை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News