செய்திகள்

சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி: கேரளாவில் அக்.1-ம் தேதி முழு அடைப்புக்கு சிவசேனா அழைப்பு

Published On 2018-09-29 14:54 IST   |   Update On 2018-09-29 14:54:00 IST
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி அளித்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் அக்டோபர் 1-ம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது. #ShivSena #Keralastrike
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்களுக்கு நிகராக அனைத்து வயதுடைய பெண்களும் வழிபட அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மகளிர் அமைப்பினரும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளாவில் அக்டோபர் 1-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் 12 மணிநேர முழு அடைப்புக்கு சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது. #ShivSena #Keralastrike #SabarimalaTempleverdict
Tags:    

Similar News