செய்திகள்

வாக்கு வங்கி அரசியல் இந்திய சமூகத்தை கரையான் போல அரித்து விட்டது - பிரதமர் மோடி

Published On 2018-09-25 11:37 GMT   |   Update On 2018-09-25 11:37 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “வாக்கு வங்கி அரசியல் இந்திய சமூகத்தை கரையான் போல அரித்து விட்டது” என பேசினார். #PMModi #KaryakartaMahakumbh
போபால்:

மத்திய பிரதேசம் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், போபால் நகரில் இன்று நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

இந்தியாவின் மேம்பாட்டுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். வாக்கு வங்கி அரசியல் நம்முடைய சமூகத்தை கரையான்கள் போல அழித்து விட்டது. வாக்கு வங்கி அரசியலை இந்தியாவைவிட்டு அகற்றுவதுதான் எங்களுடைய பணியாகும். மத்திய பிரதேச மாநிலம் வளர்ச்சி தொடர்பாக காங்கிரசிடம் எந்த எண்ணமும் கிடையாது. 

மத்தியில் இப்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.க ஆட்சியின் நம்பிக்கை என்னவென்றால் இந்தியா வளர்ச்சியடை வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களும் வளர்ச்சியடை வேண்டும் என்பதே. மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தாலும் அதற்கான காரணங்களை ஆராய காங்கிரஸ் நினைக்கவில்லை. 

இப்போது கூட்டணி அமைக்க காங்கிரஸ் சிறிய கட்சிகளிடம் கெஞ்சுகிறது. காங்கிரஸ் உள்நாட்டில் கூட்டணி அமைப்பதில் தோல்வியை தழுவிவிட்டது, எனவே இந்தியாவிற்கு வெளியே கூட்டணி அமைக்க பார்க்கிறது. இந்திய பிரதமரை உலகமா தேர்வு செய்கிறது? 

காங்கிரஸ் அதிகாரத்தை இழந்ததும் தன்னுடைய நிலையையும் இழந்து விட்டது? அவர்களிடம் இப்போது எதுவும் கிடையாது. காங்கிரஸ் கட்சி  எவ்வளவுதான் களங்கம் ஏற்படுத்தினாலும் தாமரை மலர்ந்துக் கொண்டேதான் இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 
Tags:    

Similar News