செய்திகள்

ஆங்கிலம் உள்பட எந்த மொழிக்கும் ஆர்எஸ்எஸ் எதிரானது அல்ல - மோகன் பகவத்

Published On 2018-09-19 14:24 GMT   |   Update On 2018-09-19 14:24 GMT
ஆங்கிலம் உள்பட எந்த மொழிக்கும் ஆர்எஸ்எஸ் எதிரானவர்கள் இல்லை என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இன்று பேசியுள்ளார். #RSSVision #MohanBhagwat
புதுடெல்லி:

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் எதிர்கால இந்தியா என்ற 3 நாள் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கருத்தரங்கில் மத்திய மந்திரிகள், பாலிவுட் பிரபலங்கள் உள்பட பல துறைகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்தரங்கில் இன்று பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்,  “ஆங்கிலம் உள்பட எந்த ஒரு மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆங்கிலத்தில் புலமை பெற்ற பேச்சாளர்கள் தேவைப்படுகின்றனர். நமது கலாச்சாரத்தையும் நவீன கல்வி முறையையும் உள்ளடக்கிய புதிய கல்விக்கொள்கை தேவை” என கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள் எதிர்க்கப்பட வேண்டியவையே. இதில், எப்போதும் இரட்டை நிலைப்பாடு கிடையாது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ஆர்.எஸ்.எஸ் என்றும் ஏற்றுக்கொள்ளாது. அயோத்தியில் ராமர் கோவில் விரைந்து கட்டப்பட வேண்டும்” என்றார்.
Tags:    

Similar News