செய்திகள்

தேர்தல் விதிமீறல்களை தெரிவிக்க மொபைல்ஆப் அறிமுகம்

Published On 2018-09-17 08:43 GMT   |   Update On 2018-09-17 08:43 GMT
தேர்தல் விதிமீறல்களை தெரிவிக்க தேர்தல் ஆணையம் ‘சி-விஜில்’ என்ற ‘மொபைல் ஆப்’ -ஐ உருவாக்கி இருக்கிறது. இதை ராஜஸ்தான், மிசோரம் உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தலில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. #ElectionCommission #CVIGIL #MobileApp
புதுடெல்லி:

தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி.ராவத் கூறியதாவது:-

தேர்தல் ஆணையம் ‘சி-விஜில்’ என்ற ‘மொபைல் ஆப்’ -ஐ உருவாக்கி இருக்கிறது. இதை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்திஸ்கர், ஆகிய இடங்களில் 4 மாநில சட்டசபை தேர்தலில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர் அல்லது தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

வேட்பாளர்களோ, அரசியல் வாதிகளோ தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்படுவதை வாக்காளர்கள் கண்டறிந்தால் புகைப்படம் அல்லது வீடியோவாக பதிவு செய்து அந்த செயலியின் வழியாக தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கலாம்.

கோப்புப்படம்

தகவல் கொடுப்பவர் தனது பெயர் விபரத்தை வெளியிடாமல் ரகசியம் காக்க விரும்பினால் அதற்கான வசதியும் அதில் உள்ளது.

புகாரின் உண்மைத் தன்மையை பொறுத்து 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு அந்த செயலி வழியாகவே தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #ElectionCommission #CVIGIL #MobileApp
Tags:    

Similar News