சினிமா செய்திகள்

'தீர்ப்புகள் எல்லாம் நீதி ஆகிவிடாது... மஞ்சு வாரியர் பக்கமே நான் நிற்கிறேன்' - அமீர்!

Published On 2025-12-15 19:25 IST   |   Update On 2025-12-15 19:25:00 IST
  • பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை
  • பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்பதே அறம்

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு, 6 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் உட்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தநிலையில், கேரள அரசு மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகையும், நடிகை மஞ்சு வாரியரும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்தனர். "நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. குற்றத்தைச் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் செயலைத் திட்டமிட்டு, அதற்கு வழிவகுத்த அந்த மாஸ்டர் மைண்ட் அது யாருடையதாக இருந்தாலும், இன்னும் சுதந்திரமாக நடமாடுகிறது, அதுவே மிகவும் அச்சமூட்டுகிறது." என மஞ்சு வாரியர் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மஞ்சு வாரியரின் பக்கமே தான் நிற்பதாக நடிகரும், இயக்குநருமான அமீர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டிருந்த அவர்,"பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்பதே அறம். தீர்ப்புகள் எல்லாம் நீதி ஆகிவிடாது. மஞ்சு வாரியரின் பக்கமே நான் நிற்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News