சினிமா செய்திகள்

'வித் லவ்' படத்தை பார்க்க ஆவல்! - நடிகை சிம்ரன்

Published On 2026-01-31 08:20 IST   |   Update On 2026-01-31 08:20:00 IST
  • இப்படம் வருகிற 6-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ‘வித் லவ்’ படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.

'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். தற்போது 'வித் லவ்' படம் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் ஜீவிந்த்க்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.

இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர், முதல் பாடல் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் வருகிற 6-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 'வித் லவ்' படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இதையடுத்து நடிகர் அபிஷன் ஜீவிந்த்க்கு நடிகை சிம்ரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகை சிம்ரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கேமராவுக்குப் பின்னால் இருந்து படங்களை எடுப்பது முதல் அதன் முன் தோன்றி நடிப்பது வரை!! அபிஷன் ஜீவிந்த் இந்தப் புதிய நடவடிக்கையை எடுப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.

'வித் லவ்' விரைவில் திரையரங்குகளில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். 



Tags:    

Similar News