சினிமா செய்திகள்

'டயட்' இல்லாமல் உடல் மெலிந்து அழகானது எப்படி?- ஹன்சிகா பகிர்ந்த ரகசியம்

Published On 2026-01-31 07:41 IST   |   Update On 2026-01-31 07:41:00 IST
  • நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹன்சிகாவிடம், ‘எப்படி உடல் எடை குறைத்தீர்கள்?' என்று கேட்கப்பட்டது.
  • ஹன்சிகா கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் சோகைல் கட்டாரியாவை பிரிந்து வாழ்கிறார்.

நடிகைகள் பலரும் தங்கள் உடலை அழகாக, ஒல்லியாக, கச்சிதமாக வைத்திருப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை (டயட்) கடைபிடிக்கிறார்கள். மெலிந்த தேகத்துக்கு மாறியும் வருகிறார்கள்.

அந்தவகையில் 'கொழுக் மொழுக்' என அமுல்பேபி போன்று இருந்த ஹன்சிகா மோத்வானி, என்ன செய்தாரோ தெரியவில்லை உடல் எடையை வெகுவாக குறைத்து ஆளே மாறிப் போயுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹன்சிகாவிடம், 'எப்படி உடல் எடை குறைத்தீர்கள்?' என்று கேட்கப்பட்டது.

அதற்கு ஹன்சிகா, "நான் ஒரு 'பைலேட்ஸ் கேர்ள்'. 'பைலேட்ஸ்' பயிற்சி என்பது மூட்டுகளில் அதிக அழுத்தமில்லாமல் வயிறு, முதுகு, தண்டுவடத்தின் பலம் அதிகரிக்க செய்யும் உடல் நெகிழ்வுத்தன்மைக்கான பயிற்சியாகும்'. இதுதவிர அவ்வப்போது யோகாவும் செய்து வருகிறேன்.', என்றார். ஹன்சிகா கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் சோகைல் கட்டாரியாவை பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News