சினிமா செய்திகள்
ரூ.1350 கோடி வசூலித்து அசுர வெற்றி பெற்ற 'துரந்தர்' இன்று முதல் ஓடிடியில்!..
இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.
இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் துறந்தார் 'துரந்தர்'
இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மேஹா ஹிட் ஆனது.
மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.
இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், இன்று (ஜனவரி 30) முதல் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இத்திரைப்படம் நெட்பிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
திரையரங்குகளில் இப்படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்கள் இப்போது ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.