இனி சினிமாவில் பாடமாட்டேன்.. அர்ஜித் சிங் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
- 'தும் ஹி ஹோ' பாடல் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்றார்.
- தமிழில், ‘நான் உன் அழகினிலே’, அடடா என்ன ஆழகு உள்ளிட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.
இனி திரைப்படப் பாடல்களைப் பாடப்போவதில்லை என்று பிரபல பின்னணி பாடகர் அர்ஜித் சிங் அறிவித்துள்ளார்.
38 வயதே ஆகும் கடந்த 15 ஆண்டுகளாகத் திரைப்படங்களில் பாடி வருகிறார். இந்தியில் ஆஷிக் 2 படத்தின் 'தும் ஹி ஹோ' பாடல் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்றார்.
தமிழில், 'நான் உன் அழகினிலே', அடடா என்ன ஆழகு உள்ளிட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.
கடந்த ஆண்டு இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் இனி திரைப்படங்களில் பாடப்போவதில்லை என அர்ஜித் சிங் அறிவித்துள்ளார். இருப்பினும் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
அர்ஜித் சிங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "உண்மையைச் சொல்லப்போனால், எனக்குத் திரையிசைப் பாடல்களில் ஒருவித சலிப்பு ஏற்பட்டுவிட்டது.
எனது வளர்ச்சிக்கு புதிய வகை இசையை ஆராய வேண்டிய தேவை உள்ளது. ஒரே மாதிரியான இசையில் எனக்கு ஆர்வம் குறைந்துவிட்டது.
பின்னணிப் பாடகர் பணியிலிருந்து விலகினாலும், இசையைத் நான் கைவிடவில்லை.
இனி ஒரு இண்டிபெண்டண்ட் ஆர்ட்டிஸ்ட் ஆக இசையை உருவாக்குவதிலும், இந்திய கிளாசிகல் இசையில் கவனம் செலுத்தவும் விருபுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அர்ஜித் சிங்கின் இந்தத் திடீர் முடிவு அவரது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.