செய்திகள்

மத்திய அரசுக்கு ஆகஸ்ட் மாதத்தின் ஜி.எஸ்.டி. வரி மூலம் கிடைத்த மொத்த வருவாய் 93,960 கோடி ரூபாய்

Published On 2018-09-01 12:59 GMT   |   Update On 2018-09-01 12:59 GMT
ஜி.எஸ்.டி.வரிவிதிப்பின் மூலம் மத்திய அரசுக்கு இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில்மொத்த வருவாயாக 93 ஆயிரத்து 960 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. #AugustGSTrevenue #AugustGSTRs93960
புதுடெல்லி:

சரக்கு மற்றும் சேவை வரியின் மூலம் மாதந்தோறும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து ஜி.எஸ்.டி. முறையை செயல்படுத்தி வருகிறது. அந்த இலக்கையும் கடந்து சில மாதங்களில் வருவாய் கிட்டியுள்ளது. மேலும் சில மாதங்களில் இந்த இலக்குக்கு சற்று நெருக்கமான வருவாய் கிடைத்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசுக்கு ஆகஸ்ட் மாதத்தின் ஜி.எஸ்.டி. வரி மூலம் மொத்த வருவாயாக  93 ஆயிரத்து 960 கோடிகோடி ரூபாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் வருவாய்த்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மத்திய ஜி.எஸ்.டி. வரியாக 15 ஆயிரத்து 303 கோடி ரூபாயும், மாநிலங்களின் மூலம் ஜி.எஸ்.டி. 21 ஆயிரத்து 154 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி பொருட்களுக்கு வசூலிக்கப்படும் வரி உள்பட ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் 49 ஆயிரத்து 876 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

இறக்குமதிக்கான செஸ் வரி 849 கோடி ரூபாய் உள்பட 7 ஆயிரத்து 628 கோடி ரூபாய் அளவுக்கு செஸ் வரியும் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. #AugustGSTrevenue #AugustGSTRs93960 
Tags:    

Similar News