செய்திகள்

வெள்ள நிவாரண பணிகளில் சேவையாற்றிய முப்படை வீரர்களுக்கு பினராயி விஜயன் நடத்திய வழியனுப்பு விழா

Published On 2018-08-26 13:53 GMT   |   Update On 2018-08-26 13:53 GMT
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது மீட்பு பணிகளில் சிறப்பாக சேவையாற்றிய முப்படை அதிகாரிகளுக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்தார். #KeralaRains #KeralaFloods #PinarayiVijayan
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 372 பேர் உயிரிழந்துள்ளனர்.



கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. மேலும், கேரள வெள்ள மீட்பு பணிகளுக்கு முப்படைகளை சேர்ந்தவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட  முப்படை அதிகாரிகளுக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.



திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற விழாவில் முதல் மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார். அப்போது அவர் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட முப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கேடயங்களை வழங்கி பாராட்டி வழியனுப்பி வைத்தார். #KeralaRains #KeralaFloods #PinarayiVijayan
Tags:    

Similar News