செய்திகள்

ஹிட்லர் வேடமிட்டு பாராளுமன்றத்தில் போராடிய ஆந்திர எம்பி

Published On 2018-08-09 07:11 GMT   |   Update On 2018-08-09 07:11 GMT
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தெலுங்குதேசம் கட்சி எம்பி சிவப்பிரசாத் ஹிட்லர் வேடமணிந்து பாராளுமன்ற வளாகத்தில் போராடினார். #TDPProtest #NaramalliSivaprasad #AndhraSpecialStatus
புதுடெல்லி:

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றாத நிலையில், ஆந்திராவின் ஆளுங்கட்சியான தெலுங்குதேசம் கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது. அத்துடன் மாநில சிறப்பு அந்தஸ்துக்காக பாராளுமன்றத்தில் தெலுங்குதேசம் கட்சி எம்பிக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

மேலும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாராளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக நாரமள்ளி சிவப்பிரசாத் எம்பி, பல்வேறு வேடமணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாரதமுனி, பள்ளி மாணவன் உள்ளிட்ட பல்வேறு கெட்அப்களில் வந்து போராடிய சிவப்பிரசாத் இன்று ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் போன்று வேடமணிந்து பாராளுமன்றத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.


மத்திய அரசு சர்வாதிகார போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டும் வகையில் அவர் இன்று ஹிட்லர் வேடம் அணிந்து வந்துள்ளார்.

சிவப்பிரசாத் எம்பி, திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர். இவர் 20-க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #TDPProtest #NaramalliSivaprasad #AndhraSpecialStatus
Tags:    

Similar News