செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் போலீசாரின் என்கவுண்டரில் 2 குற்றவாளிகள் சுட்டுக்கொலை

Published On 2018-07-07 14:44 GMT   |   Update On 2018-07-07 14:44 GMT
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகள் போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
லக்னோ:

உத்திரப்பிரதேச மாநிலம் ராம்நகர் பகுதியில் 17 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த முஷிர் மற்றும் இப்ராகிம் ஆகிய 2 குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை குற்றவாளிகள் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர்.

போலீசாரை கண்ட முஷிர் மற்றும் இப்ராகிம் அங்கிருந்து தப்பிப்பதற்காக போலீசாரை துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காவல்துறையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 குற்றவாளிகளும் கொல்லப்பட்டனர். இதுகுறித்து எஸ்.பி. ஸ்ரீவசதாவ் கூறுகையில், 'அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 காவலர்கள் காயமடைந்தனர். தற்காப்புக்காக நாங்கள் சுட்டதில் முஷிர் மற்றும் இப்ராகிம் கொல்லப்பட்டனர்' என தெரிவித்துள்ளார்.

முஷிர் மற்றும் இப்ராகிமை பிடித்துக்கொடுக்க 50 ஆயிரம் ரூபாய் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News