செய்திகள்

மின்னலால் பறிபோன கல்யாணம் - பீகாரில் வினோதம்

Published On 2018-06-30 17:06 IST   |   Update On 2018-06-30 17:06:00 IST
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் மின்னலை பார்த்து மணமகன் பயந்ததால் மணமேடையிலேயே மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:

பொதுவாக, வடமாநிலங்களில் சில திருமணங்கள் வினோத காரணங்களுக்காக மேடையிலேயே நின்றுபோகும் நிகழ்வு அவ்வப்போது நடக்கிறது. உதாரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரசகுல்லா இல்லை என்பதற்காக நிறுத்தப்பட்ட கல்யாணம், ஐஸ் கிரீம் வைக்காததால் ஏற்பட்ட தகராறில் மண்டை உடைப்பு என திருமணம் நிறுத்தப்படுவதற்கான காரணங்கள் நீள்கின்றன.

இந்த வரிசையில், பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த திருமணத்தின்போது மணமேடையில் இருந்த மாப்பிள்ளை மின்னலை பார்த்து பயந்து, வினோதமாக நடந்து கொண்டார். இதனைக் கண்ட மணப்பெண்ணோ மேடையிலேயே மாப்பிள்ளை வேண்டாம் எனக்கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இதனால் இரு வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மாப்பிள்ளை வீட்டார் சிலர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. சில வினாடிகள் தோன்றி மறைந்த மின்னல் மணமகனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியா நினைவாக மாறிவிட்டது. 
Tags:    

Similar News