செய்திகள்

இரும்பு ஆலை வேண்டி 11-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் ஆந்திர எம்.பி

Published On 2018-06-30 07:52 GMT   |   Update On 2018-06-30 07:52 GMT
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையை அமைத்துத் தரக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ரமேஷ் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். #AndhraPradesh #TDP #Ramesh
ஐதராபாத்:

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை பிரித்தபோது ஆந்திராவுக்கு என சில வாக்குறுதிகளை மத்திய பா.ஜ.க அரசு அறிவித்து இருந்தது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, ஒருங்கிணைக்கப்பட்ட இரும்பு ஆலை போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், எந்த வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு தெலுங்கு தேசம் கட்சி நெருக்கடி கொடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஒருங்கிணைந்த இரும்பு ஆலையை அமைத்து தரக்கோரி, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி ரமேஷ் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.



அவரது உண்ணாவிரதம் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. இதனால் ரமேஷின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய எம்.பி ரமேஷ், ஆலை அமைப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இறுதி வரை போராடுவேன் எனவும் தெரிவித்தார். #AndhraPradesh #TDP #Ramesh
Tags:    

Similar News