செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பெண்களை சமாளிக்க களமிறங்கும் பெண் பாதுகாப்பு படை

Published On 2018-06-30 04:24 GMT   |   Update On 2018-06-30 04:24 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை சமாளிக்க பெண் பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். #JammuKashmir #LadyCommandos
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெறும்போது, பாதுகாப்பு படையினரால் அப்பகுதி மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால், பாதுகாப்பு படையினருக்கு எதிராக பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுக்கின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் தடியடி போன்ற வழிமுறைகள் மூலம் மக்கள் போராட்டத்தை கலைக்கின்றனர்.



ஆண் பாதுகாப்பு படை வீரர்களே பெரும்பாலும் இருப்பதால் அவர்கள் மீது கல்லெறிந்து பெண்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில், நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பெண் பாதுகாப்பு படை வீரர்களின் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு, இருளில் செயல்படுவது முதல், துப்பாக்கி சுடுவது வரை அனைத்து விதமான பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதுகாப்பு படையினர் மீது கல் எறியும் பெண்களை தடுக்க முடியும் என கூறப்படுகிறது. #JammuKashmir #LadyCommandos
Tags:    

Similar News