செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதித்தது பா.ஜ.க. தான் - மத்திய மந்திரிக்கு உமர் பதிலடி

Published On 2018-06-23 08:50 GMT   |   Update On 2018-06-23 08:50 GMT
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்க அனுமதித்தது பா.ஜ.க.தான் என முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். #Omar #JKMilitancy
ஸ்ரீநகர்:

மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, ஜம்மு காஷ்மீரில் அதிக அளவிலான பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றிருப்பதாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூறியிருந்தார். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை பட்டியலிட்டு ஒப்பீடு செய்தார். இதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் கதை என்றும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.



இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக்கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“ஜம்மு காஷ்மீரில் அதிக அளவிலான பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கொல்ல வேண்டிய அளவிற்கு பயங்கரவாதம் மற்றும் வன்முறையை மீண்டும் தலைதூக்க அவர்கள் அரசாங்கம் எப்படி அனுமதித்தது? என்கிற கதையைத்தான் உண்மையில் மந்திரி சொல்லியிருக்கிறார். நீங்கள் தெரிவித்த புள்ளி விவரங்களால் நீங்கள் வருத்தப்பட வேண்டுமே தவிர, சாதனையாக கருதக்கூடாது” என உமர் கூறியுள்ளார். #Omar #JKMilitancy
Tags:    

Similar News