செய்திகள்

பிரணாப் முகர்ஜி இனி தீவிர அரசியலில் ஈடுபட மாட்டார் - மகள் ஷர்மிஸ்தா அறிவிப்பு

Published On 2018-06-10 19:45 IST   |   Update On 2018-06-10 19:45:00 IST
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தனது தந்தை பிரணாப் முகர்ஜி இனி தீவிர அரசியலில் ஈடுபட மாட்டார் என ஷர்மிஸ்தா முகர்ஜி இன்று தெரிவித்துள்ளார். #SharmisthaMukherjee #PranabMukherjee #activepolitics
புதுடெல்லி:

சிவசேனாவுடன் கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளவும், அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் பா.ஜ,க தலைவர் அமித்ஷா சமீபத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் ஆலோசனை செய்தனர்.

இதற்கிடையே, நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்.விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர் சஞ்சய் ரவுத், வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால், பிரணாப் முகர்ஜியை பிரதமர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ் முன்நிறுத்தும் என கருத்து தெரிவித்திருந்தார். 

இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதும், சஞ்சய் ரவுத்துக்கு தனது டுவிட்டர் பக்கத்தின் மூலமாக இன்று நேரடியாக பதில் அளித்துள்ள பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற எனது தந்தை , இனி ஒருபோதும் தீவிர அரசியலில் ஈடுபட மாட்டார் என தெரிவித்துள்ளார். #SharmisthaMukherjee #PranabMukherjee #activepolitics
Tags:    

Similar News