செய்திகள்

கர்நாடக கவர்னர் ராஜினாமா செய்வது நல்லது - ராகுல் காந்தி

Published On 2018-05-19 13:03 GMT   |   Update On 2018-05-19 13:03 GMT
கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கவர்னர் வஜுபாய் வாலா ராஜினாமா செய்வது நல்ல யோசனையாக இருக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #rahulgandhi #karnatakagovernor
புதுடெல்லி:

கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்தார். 

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘கர்நாடக மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களை வெளிப்படையாக விலைக்கு வாங்குவதை பிரதமர் மோடி நேரடியாக ஆதரித்ததை மக்கள் பார்த்தனர்.

எனவே, நாட்டில் ஊழலை ஒழிப்பேன் என்று அவர் பேசி வருவது அப்பட்டமான பொய் என்பதும் அவரே ஊழல்வாதி என்பதும் தெளிவாக புரிகிறது. 

பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நின்றதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். இனியும் காங்கிரஸ் கட்சி இதர எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க.வை வீழ்த்தும். கவர்னர் வஜுபாய் வாலா ராஜினாமா செய்வது நல்ல யோசனையாக இருக்கும் என நான் கருதுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #rahulgandhi #karnatakagovernor
Tags:    

Similar News