செய்திகள்

தியேட்டரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வழக்கை உடனே பதிவு செய்யாத எஸ்.ஐ. மீது போக்சோ வழக்கு

Published On 2018-05-18 08:17 GMT   |   Update On 2018-05-18 08:17 GMT
தியேட்டரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழில் அதிபரை முறையாக விசாரிக்காததால் எஸ்.ஐ. மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள திருத்தாலா பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மைதீன்(வயது60).

இவர் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் வைத்து 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த காட்சி அந்த தியேட்டரில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவானதை தொடர்ந்து அது பற்றி சங்கரன்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

ஆனால் போலீசார் இந்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சிறுமிக்கு தொழில் அதிபர் பாலியல் தொல்லை கொடுக்கும் காட்சி அங்குள்ள டி.வி.சானல்களில் ஒளிபரப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டுச் செல்லப்பட்டது. கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா இந்த சம்பவம் தொடர்பாக நேரடி விசாரணை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து சங்கரன் குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் தொழில் அதிபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது அதை தடுக்காமல் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக அந்த சிறுமியின் தாயாரையும் போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை முறையாக விசாரிக்காததால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.#tamilnews
Tags:    

Similar News