தமிழ்நாடு செய்திகள்
இதர நாட்களில் கார்த்திகை தீபம் ஏற்றுவது..?- பிள்ளையார்பட்டி கோயில் தலைமை குருக்கள் விளக்கம்
- பிள்ளையார்பட்டி கோயில் தலைமை குருக்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- திருக்கார்த்திகை தினத்தன்று திருக்கோவில்களில் தீபமேற்றி வழிபடுவதுதான் வழக்கம்.
கார்த்திகை தீபத்தன்று தவிர இதர நாட்களில் கோயில்களில் தீபம் ஏற்றுவது வழக்கத்திற்கு மாறானது என பிள்ளையார்பட்டி கோயில் தலைமை குருக்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிவாகமங்களில் கூறியபடி திருக்கார்த்திகை தினத்தன்று திருக்கோவில்களில் தீபமேற்றி வழிபடுவதுதான் வழக்கம் என்பதையும் இதர நாட்களில் இவ்வழிபாடு செய்வது வழக்கத்திற்கு மாறானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கார்த்திகை தீபத்தை தவிர்த்து பிற நாட்களில் தீபமேற்றுவது நல்லதல்ல என்றும், இதர நாட்களில் தீபம் ஏற்றுவது வழக்கத்திற்கு மாறானது எனவும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அர்ச்சகர்கள், கோயில் செயல் அலுவலருக்கு கடிதம் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.