தமிழ்நாடு செய்திகள்

மக்கள் இதயங்களில் இன்று வரை நீங்காத இடம் பெற்றிருப்பவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் புகழாரம்

Published On 2025-12-05 12:07 IST   |   Update On 2025-12-05 12:07:00 IST
  • அரசியலில் இரும்புப் பெண்மணியாக இருந்து, அசைக்க முடியாத வெற்றிகளைப் பெற்றவர்.
  • ஜெயலலிதா மேற்கொண்ட உறுதிமிக்க அரசியல் பயணம் என்றென்றும் அவர் புகழைப் பறைசாற்றும்.

சென்னை:

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டு உள்ள வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

அரசியலில் இரும்புப் பெண்மணியாக இருந்து, அசைக்க முடியாத வெற்றிகளைப் பெற்று, மக்கள் இதயங்களில் இன்றுவரை நீங்காத இடம் பெற்றிருக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளில் அன்னாரை நினைவு கூர்கிறேன்.

பெண்கள் முன்னேற்றம், தமிழக நலன், ஒன்றுபட்ட இந்தியா என்று பல வகைகளில் அவர் மேற்கொண்ட உறுதிமிக்க அரசியல் பயணம் என்றென்றும் அவர் புகழைப் பறைசாற்றும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News