செய்திகள்

அதிக இடங்கள் வென்றாலும் தனிப்பெரும்பான்மை கிடைப்பதில் பாஜகவுக்கு சிக்கல்

Published On 2018-05-15 13:35 IST   |   Update On 2018-05-15 13:41:00 IST
கர்நாடக தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், பாஜக அதிக இடங்களில் வென்றாலும் தனிப்பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #KarnatakaVerdict #BJP
பெங்களூர்:

கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 224 இடங்களில் 222 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 106 இடங்கள் வரை முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் கட்சி 72 இடங்களிலும், மஜத 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. சற்று நேரத்திற்கு முன்னதாக பெரும்பான்மை இடங்களை தாண்டி பாஜக முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், பாஜக ஆட்சியமைக்க எந்த எல்லைக்கும் செல்லும் என்பது முந்தைய தேர்தல் வரலாறுகளில் தெரிய வந்தது. அதேபோல, இம்முறையும் எப்படியாவது ஆட்சியமைக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுக்கும்.

காங்கிரஸ் கட்சியும், மஜத கட்சியும் கூட்டணி அமைக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால், அம்மாநில அரசியல் களம் பரபரப்பானதாக மாறியுள்ளது. #KarnatakaVerdict #BJP
Tags:    

Similar News