தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 98.23 சதவீத SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் - தேர்தல் ஆணையம்

Published On 2025-12-06 04:44 IST   |   Update On 2025-12-06 04:44:00 IST
  • அதாவது, 6 கோடியே 39 லட்சத்து 95 ஆயிரத்து 854 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • 98.23 சதவீதம் திரும்பபெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகாரை தொடர்ந்து தேர்தலை சந்திக்கும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள்(SIR) நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4-ந் தேதி முதல் SIR பணிகள் தொடங்கிய நிலையில் வரும் 11-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில் 99.81 சதவீதம் பேருக்கு, அதாவது, 6 கோடியே 39 லட்சத்து 95 ஆயிரத்து 854 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், அவற்றில் 6 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரத்து 208 படிவங்கள் அதாவது 98.23 சதவீதம் திரும்பபெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையம் அறிவித்துள்ளது.

அதேபோல் புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்களில் 99.93 சதவீத பேருக்கு அதாவது, 10 லட்சத்து 20 ஆயிரத்து 815 கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டதாவும் அவற்றில் 10 லட்சத்து 11 ஆயிரத்து 921 படிவங்கள், தோராயமாக 99.05 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News