உலகம்
புதின் இந்தியா வருகைக்கு இடையில் உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல் - 12 வயது சிறுவன் பலி
- 137 ஆளில்லா டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்தது.
- அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அமைதி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மத்திய உக்ரைனில் ரஷிய டிரோன் தாக்குதலில் 12 வயது சிறுவன் கொல்லப்பட்டான்.
வியாழக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் 137 ஆளில்லா டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்தது.
அதே நேரம் ரஷிய துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு தாக்குதல் நடத்த வந்த 85 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷியா கூறியுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அமைதி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலிலும், ரஷிய அதிபர் புதின் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சூழலிலும் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.