செய்திகள்

நாசிக் அச்சகத்தில் ரூ.500 புதிய நோட்டுகள் அச்சடிப்பு பணி தீவிரம்

Published On 2016-11-13 05:07 GMT   |   Update On 2016-11-13 05:07 GMT
நாசிக் அச்சகத்தில் ரூ.500 புதிய நோட்டுகள் அச்சடிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாசிக்:

இந்தியாவில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அவற்றை பொது மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள். பழைய ரூ.500 நோட்டுக்குப் பதில் புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது.

ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான அச்சகங்கள் மைசூர் மற்றும் மராட்டிய மாநிலம் நாசிக் ஆகிய இடங்களில் செயல்படுகிறது. இதில் நாசிக்கில் உள்ள அச்சகத்தில் புதிய ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக 50 லட்சம் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு அவை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. விரைவில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் புதிய 20, 50, 100 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இவை அதிக அளவில் அச்சடிக்கப்டுகிறது. இந்த நோட்டுகளும் புழக்கத்துக்கு விரைவில் வரும் என்று தெரிகிறது. இந்த நோட்டுகள் வந்த பின்புதான் பணத்தட்டுப்பாடு நீங்கும்.

இதற்கு இன்னும் 2, 3 வாரங்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News