செய்திகள்

ஐதராபாத் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2016-09-17 08:49 GMT   |   Update On 2016-09-17 08:49 GMT
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை வகுப்பில் படித்துவரும் மாணவர் இங்குள்ள விடுதியில் நேற்றிரவு தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்:

ஆந்திர மாநிலம், மஹ்பூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஷாத்நகர் பகுதியைச் சேர்ந்த பர்வீன் என்ற மாணவர் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டய வகுப்பில் படித்தவாறு பல்கலைக்கழக வளாக விடுதியில் உள்ள அறையில் தங்கி வந்தார்.

நேற்றிரவு அறைக்கு திரும்பிய சகமாணவர்கள் உள்ளே பர்வீன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு
திடுக்கிட்டனர். உடனடியாக, விடுதி நிர்வாகிகளுக்கு அவர்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட பர்வீனின் உயிர் வரும் வழியிலேயே பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் காட்டுத்தீப்போல் பரவியதால் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்கும் இதர மாணவர்கள் அங்கு திரண்டு வந்தனர். பர்வீனின் மர்ம மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதே ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர் மர்மமான முறையில் இறந்ததும், அதைத்தொடர்ந்து ஒருமாத காலத்துக்கும் மேலாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டதும் நினைவிருக்கலாம்.

Similar News