இந்தியா

மும்பை-புனே விரைவுச் சாலையில் 20 வாகனங்கள் மீதி லாரி மோதி பயங்கர விபத்து

Published On 2025-07-26 21:04 IST   |   Update On 2025-07-26 21:04:00 IST
  • BMW மற்றும் Mercedes போன்ற சொகுசு கார்கள் உட்பட பல வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
  • விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கோபோலி அருகே மும்பை-புனே விரைவுச் சாலையில் இன்று (ஜூலை 26) ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது.

மும்பை நோக்கிச் செல்லும் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் சுமார் 20 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டன.

முதற்கட்ட தகவல்களின்படி, ஒரு கன்டெய்னர் லாரி சரிவில் இறங்கும்போது பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த லாரி, அதன் முன்னால் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது மோதியது, இதனால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன.

பத்தில் BMW மற்றும் Mercedes போன்ற சொகுசு கார்கள் உட்பட பல வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இந்த விபத்தில் இதுவரை 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நவி மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், விபத்து நடந்த நேரத்தில் அவர் மது அருந்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News