இந்தியா
இந்த ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வருகை - 75 ஆண்டு கால வரலாற்றில் இது அதிகம்
- நடப்பு ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
- 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இந்த முறை சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாகும்.
ஸ்ரீநகர்:
ஜனவரி 2022 முதல் தற்போது வரை ஜம்மு காஷ்மீருக்கு 1 கோடியே 62 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் என ஜம்மு காஷ்மீரின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மேலும், 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இந்த ஆண்டு தான் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்துள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் கூறியுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. அதன்பின், கடந்த ஆண்டு கணிசமாகக் கூடிய இந்த எண்ணிக்கை தற்போது 1.62 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.