இந்தியா

15 வயது சிறுமியை ஏமாற்றி 2 ஆண்டுகளாக பலாத்காரம்- ரூ.11 லட்சத்தை பறித்த வாலிபர்

Update: 2022-06-25 04:26 GMT
  • சிறுமியின் தந்தை வைத்திருந்த பணத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவர் சிறுமியிடம் இது பற்றி கேட்டார்.
  • அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த நானாஜி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பணத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டதாக தெரிவித்தார்.

திருப்பதி:

ஆந்திரா மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நானாஜி (வயது 22). சிறுமியின் தாயார் இறந்துவிட்டதால் தந்தை வியாபாரத்திற்கு வெளியூர் செல்லும்போது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வருவார்.

அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த நானாஜி சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நட்பாக பழகினார்.

சிறிது நாட்கள் கழித்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறுமியை பலாத்காரம் செய்து வந்தார்.

மேலும் சிறுமியின் தந்தை வீட்டில் ரூ.12 லட்சம் வைத்திருந்தார். அதில் ரூ.11 லட்சத்தை சிறுமியை ஏமாற்றி வாங்கி தனது குடும்பத்தாருக்கு கொடுத்தார்.

சிறுமியின் தந்தை வைத்திருந்த பணத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவர் சிறுமியிடம் இது பற்றி கேட்டார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த நானாஜி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பணத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து நானாஜி வீட்டுக்கு சென்ற சிறுமியின் தந்தை 18 வயது நிரம்பியவுடன் தனது மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்.

அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி சிறுமியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தனர். இதனால் விரக்தி அடைந்த சிறுமியின் தந்தை அனகாபள்ளி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்து அவரிடமிருந்து பணத்தை பறித்ததாக வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள நானாஜி மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News