இந்தியா

மகாராஷ்டிரா: பாலம் கட்டும் பணியின்போது ராட்சத இயந்திரம் விழுந்து 17 தொழிலாளர்கள் பலி

Published On 2023-08-01 06:33 IST   |   Update On 2023-08-01 09:13:00 IST
  • ராட்சத இயந்திரம் சரிந்ததால் விபத்து ஏற்பட்டது
  • விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3-ம் கட்ட பணி நடைபெற்று வந்தது.

இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக கிர்டர் (ராட்சத இயந்திரம்) பயன்படுத்தப்படும். திடீரென அந்த ராட்சத இயந்திரம் சரிந்துள்ளது. இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 பேர் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயம் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மும்பை- நாக்பூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலையாக இந்த சாலை கட்டப்பட்டு வருகிறது. இந்த சாலை நாக்பூர், வாசிம், வர்தா, அகமதாபாத், பல்தானா, அவுரங்கபாத், அமாரவதி, ஜல்னா, நாஷிக் மற்றும் தானே மாவட்டங்களை கடந்து செல்கிறது. மகாராஷ்டிரா மாநில அரசால் இந்த சாலை கட்டப்பட்டு வரும் இந்த சாலைக்கு சம்ருதி மஹாமார்க் என பெயரிடப்பட்டுள்ளது.

பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News