இந்தியா
காசி மக்களிடையே தமிழ் பிரபலமடைந்து வருகிறது: மன் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
- காசி தமிழ் சங்கமத்தின்போது, காசி மக்களிடையே தமிழ் பிரபலமடைந்து வருவது தெளிவாகக் காணப்பட்டது.
- பிஜியில் தமிழ் பிரபலம் அடைவதைக் காண்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். இன்று தனது 129-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசினார்.
அப்போது "காசி தமிழ் சங்கமத்தின்போது, காசி மக்களிடையே தமிழ் பிரபலமடைந்து வருவது தெளிவாகக் காணப்பட்டது. இது மனநிறைவைத் தருகிறது.
நாம் வலுவான கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடான ஃபிஜியில் தமிழ் பிரபலம் அடைவதைக் காண்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது" எனக் குறிப்பிட்டார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.