பள்ளி மாணவியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 14 பேர்
- ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- வழக்கு தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி. இவர் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தனது தாயுடன் வசித்து வந்த மாணவியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதை தொடர்ந்து அவருடைய நண்பர்களும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த 2 ஆண்டுகளாக 14 பேர் மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவி கர்ப்பமானார். பயந்து போய் மாணவி இந்த விவகாரத்தை வெளியே கூறவில்லை. தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவருடைய தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் மாணவியை 14 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.