இந்தியா

முப்தி முஸ்தபா, அப்பாஸ் அலி, அப்சருதின் புயான் 

அசாம் மாநிலத்தில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையே 11 பேர் கைது

Published On 2022-07-29 03:39 GMT   |   Update On 2022-07-29 03:39 GMT
  • நான்கு மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் முறியடிப்பு.
  • அசாம் காவல்துறை, மத்திய விசாரணை அமைப்புகள் இணைந்து கூட்டு நடவடிக்கை.

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளாக கருதப்படும் அல்கொய்தா மற்றும் பங்களாதேஷில் இயங்கும் அன்சருல்லா பங்களா அணி ஆகியவற்றுடன் தொடர்படையே 11 பேரை, அசாம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் மதரசா பள்ளியின் ஆசிரியர் என்பதும் தெரிய வந்துள்ளது.

அந்த மாநிலத்தின் பார்பெட்டா, குவகாத்தி, கோல்பாரா மற்றும் மொரிகான் மாவட்டங்களில் இந்த பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் செயல்பட்டு வந்துள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் மாநில காவல்துறையின் ஒருங்கிணைந்த முயற்சியால் பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் இருந்து ஏராளமான மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News