இந்தியா
null

வாரத்தில் 6 நாள் பணி- 'வேலை- வாழ்க்கை- சமநிலை'-யில் நம்பிக்கை இல்லை - என்னதான் ஆச்சு நாராயணமூர்த்திக்கு?

Published On 2024-11-15 13:23 IST   |   Update On 2024-11-15 14:11:00 IST
  • கடின உழைப்புக்கு மாற்று, வேறு எதுவும் கிடையாது.
  • வாரத்தில் 6 நாட்கள் பணி நாள் என இருந்ததை 5 நாட்களாக மாற்றப்பட்டது எனக்கு ஏமாற்றத்தை தந்தது.

இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் நாராயணமூர்த்தி. இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர். இவரது மனைவி சுதா மூர்த்தி. இவரும் சமூக சேவைகள் மூலம் மக்கள் பணியாற்றி வருகிறார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து நாராயணமூர்த்தி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார். மேலும் தொலைக்காட்சிகளில் நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார்.

அப்போது அவர் கூறும் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் கடந்த ஆண்டு நாராயண மூர்த்தி கூறிய கருத்து பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, ‛இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்'' என கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது. இது பெரிய அளவில் விவாதமாக மாறியது.

இந்நிலையில் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் நாராயணமூர்த்தி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில், வேலை-வாழ்க்கை சமநிலை என்ற விஷயத்தில் (Work-life balance) எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. கடின உழைப்புக்கு மாற்று, வேறு எதுவும் கிடையாது.

இந்தியாவில் வாரத்தில் 6 நாட்கள் பணி நாள் என இருந்ததை 1986-ல் 5 நாட்களாக மாற்றப்பட்டது எனக்கு ஏமாற்றத்தை தந்தது. பிரதமர் மோடி வாரத்திற்கு 100 மணிநேரம் பணியாற்றும்போது, அதற்கு ஏற்றபடி நாமும் கடின உழைப்பை செலுத்துவதுதான் அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதையாக இருக்கும் என கூறியுள்ளார்.

நாராயணமூர்த்தி தம்பதியின் மகள் அக்சதா மூர்த்தியின் கணவரான ரிஷி சுனக் முன்னாள் பிரிட்டன் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News