இந்தியா

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக-வுக்கு 1300 கோடி ரூபாய் நிதி

Published On 2024-02-11 06:18 GMT   |   Update On 2024-02-11 06:18 GMT
  • 2022-23 நிதி ஆண்டில் கிடைத்த ரூ. 2120 கோடி நிதியில் 61 சதவீதம் தேர்தல் பத்திரங்களில் இருந்து கிடைத்து உள்ளது.
  • 2021-22-ல் ரூ.1775 கோடி என்ற அளவில் இருந்த நிலையில் 2022-2023-ல் மேலும் அதிகரித்துள்ளது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் வெளியிட்டு கட்சிக்கு நிதி சேர்த்து வருகின்றன. அந்த வகையில் 2022-23-ம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,300 கோடி பாஜக-வுக்கு கிடைத்தது. இது காங்கிரஸ் கட்சியை விட 7 மடங்கு அதிகம் ஆகும்.

2022-23 நிதி ஆண்டில் கிடைத்த ரூ. 2120 கோடி நிதியில் 61 சதவீதம் தேர்தல் பத்திரங்களில் இருந்து கிடைத்து உள்ளது என தேர்தல் ஆணைத்திற்கு சமர்ப்பித்த வருடாந்திர தணிக்கை அறிக்கையில் பாஜக தெரிவித்து உள்ளது.

2021-22-ல் ரூ.1775 கோடி என்ற அளவில் இருந்த நிலையில், 2022-23-ம் ஆண்டில் ரூ. 2360.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் 2022-23-ல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.171 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 2021-22-ல் 236 கோடி ரூபாய் இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் மிகவும் குறைந்துள்ளது.

சமாஜ்வாடி கட்சிக்கு 2021-22-ல் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 3.2 கோடி கிடைத்துள்ளது. ஆனால் 2022-2023 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் ஏதும் பெறவில்லை.

Tags:    

Similar News