செய்திகள்

தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கும் தொகுதியாக சேலம் முத்திரை பதிக்கும் - எடப்பாடி பழனிசாமி

Published On 2019-03-20 12:23 IST   |   Update On 2019-03-20 13:51:00 IST
தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கும் தொகுதியாக சேலம் முத்திரை பதிக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #ADMK #EdappadiPalaniswami

சேலம்:

சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கே.ஆர்.எஸ். சரவணன் போட்டியிடுகிறார். இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சேலம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

ஒரு மெகா கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றோம். இந்த கூட்டணி மிகப் பெரிய கூட்டணி. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே திரும்பி பார்க்கின்ற பலமான கூட்டணியாக அமைந்திருக்கின்றது.

 


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கின்ற 40 பாராளுமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாராளுமன்றம் சேலம் பாராளுமன்றம் என்ற முத்திரையை பதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிற்பகல் அவர் தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு செல்கிறார். அங்கு நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். மேலும் அவர் தொகுதி முழுவதும் நிர்வாகிகளை சந்திக்கிறார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரவில் சேலம் திரும்புகிறார்.

சேலம் மாவட்டத்தில் நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய பாராளுமன்ற தொகுதிகள் வருகிறது. எனவே அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நாளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் கோவைக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் சேலம் வந்தார். அவருக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #ADMK #EdappadiPalaniswami

Tags:    

Similar News