ஜாகீர்வெங்கடாரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி
- அரசு பள்ளியில் கட்டுரை-பேச்சு போட்டிகள் நடந்தது.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி மையம் சார்பில், விழிப்புணர்வு வாரம் மற்றும் திறன் வாரம், ஜூலை இரண்டாவது வாரம் கொண்டாடும் வகையில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.
கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற 15 மாணவ, மாணவியரில், எம்.காவியா என்ற மாணவி முதலிடத்தையும், எஸ்.காவியா என்ற மாணவி இரண்டாம் இடத்தையும், ஜீவஜோதி என்ற மாணவி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். பேச்சுப் போட்டியில் பங்கேற்ற 12 மாணவ, மாணவியரில் லக்சித் முதலிடத்தையும், சதீஷ்குமார் இரண்டாமிடத்தையும், மீரா மூன்றாமிடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொ) விஜய் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.