உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை- கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2022-09-10 15:40 IST   |   Update On 2022-09-10 15:40:00 IST
  • சிறுமியிடம் ஆன்லைன் விளையாட்டு மூலம் பழகி, பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
  • சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்வரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் அமணம்பாக்கம் கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் என்ற விக்கி (வயது 26). பட்டதாரியான இவர், ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் ஆன்லைன் விளையாட்டு மூலம் பழகி, பாலியல் தொந்தரவு கொடுத்தார். மேலும் இதுபற்றி சிறுமியின் தாயிடம் கூறி ரூ.50 ஆயிரம் கேட்டும் மிரட்டினார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்வரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான விக்னேஷ்வரன் மீது ஏற்கனவே சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் 4 குற்ற வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News