உள்ளூர் செய்திகள்

நாமகிரிப்பேட்டை அருகே மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது

Published On 2023-04-06 13:12 IST   |   Update On 2023-04-06 13:12:00 IST
  • நாமகிரிப்பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அழியாக்குழந்தைபுதூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மனைவி நல்லம்மாள் (வயது 85). இவர் தனியாக வசித்து வருகிறார்.
  • நித்திய ராஜவேலன் (27) என்ற கூலித் தொழிலாளி, மூதாட்டி நல்லம்மாளிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அழியாக்கு ழந்தைபுதூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மனைவி நல்லம்மாள் (வயது 85). இவர் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்ப வத்தன்று, அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் நித்திய ராஜவேலன் (27) என்ற கூலித் தொழிலாளி, மூதாட்டி நல்லம்மாளிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு மூதாட்டி மறுக்கவே நித்திய ராஜவேலன் மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததார். காயம் அடைந்த நல்லம்மாள், நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் இது பற்றி நல்லம்மாள் நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீ சார், நித்திய ராஜவேலன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பிறகு அவரை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ராசிபுரம் கிளை சிறைச்சா லையில் அடைத்தனர்.

Tags:    

Similar News