உள்ளூர் செய்திகள்
காரமடையில் ஆட்டோவில் காட்டுப்பன்றி மோதி தொழிலாளி பலி
- செந்தில்குமார் வேலை முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பினார்.
- காட்டுப்பன்றி வேகமாக ஓடிவந்து ஆட்டோவின் முன்பக்க சக்கரத்தில் மோதியது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை எம்.ஜி.ஆர் காலனி மங்களக்கரை புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(43). கூலிதொழிலாளி.
இவர் நேற்று இரவு வேலை முடிந்து பயணிகள் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது குருந்தமலை-புங்கம்காளையம் அருகே ஒரு காட்டுப்பன்றி வேகமாக ஓடிவந்து ஆட்டோவின் முன்பக்க சக்கரத்தில் மோதியது.இதில் நிலைதடுமாறிய ஆட்டோ ரோட்டில் கவிழ்ந்தது.
இதில் செந்தில்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனவே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, காரமடை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார்.
இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.