உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2022-11-11 14:49 IST   |   Update On 2022-11-11 14:49:00 IST
  • நாகராஜை பிரிந்து மணி 15 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
  • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் ராமேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் மணி (49). கூலி தொழிலாளி. இவரது கணவர் நாகராஜ். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளாகிறது. இதனிடையே நாகராஜை பிரிந்து மணி 15 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அவருக்கு உடல்நிலை பாதிப்பால் அவதி அடைந்து வருகிறார். அதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது சாணி பவுடரை கரைத்து குடித்து மயங்கினார். இதை பார்த்த அவரது தந்தை கண்ணையன், மணியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணி உயிரிழந்தார். இதுகுறித்து கண்ணையன் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News