உள்ளூர் செய்திகள்
தீராத வயிற்று வலியால் பெண் விஷம் அருந்தி சாவு
- தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
- வயிற்று வலி குணமடையாததால் விஷம் அருந்தி மயங்கி விழுந்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்த மலையாண்ட அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன், இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது47). இவருக்கு தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தும் வயிற்று வலி குணமடையாததால் கடந்த 13-ந் தேதி விஷம் அருந்தி மயங்கி விழுந்துள்ளார்.
இவரை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.