உள்ளூர் செய்திகள்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லால்வேனா ஆய்வு செய்து மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அருகில் கலெக்டர் மேகநாதரெட்டி உள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள்

Published On 2022-06-15 09:08 GMT   |   Update On 2022-06-15 09:08 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என அரசு செயலாளர் கூறினார்.
  • இருப்பிடத்திற்கு அருகிலேயே வேலை வாய்ப்பினை வழங்க தேவையான வழிவகைகள் செய்ய வேண்டும்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லால்வேனா, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்தி றனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, அடையாள அட்டை வழங்கப்பட்ட விவரம் குறித்து முழுமையான கணக்கெடுப்பு பணி கள் மேற்கொள்ள வேண்டும்மாற்று த்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID – Unique Disability Identity Card) வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த வங்கிகளில் தொழில்கடன் பெறவும், அவர்களுக்கு இருப்பிடத்திற்கு அரு கிலேயே வேலை வாய்ப்பினை வழங்க தேவையான வழிவகைகள் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மாதம் ஒருமுறை சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்தி ட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.

முன்னதாக, சிவகாசி, சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ மனவளர்ச்சி குறையுடையோர் பள்ளிக்கு சென்று, வகுப்பறைகளை ஆய்வு செய்தார். அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.

18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தொழில்சார்ந்த பயிற்சிகள் மற்றும் அவர்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களையும் பார்வையிட்டார். தசைபயிற்சி மையத்தில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லால்வேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சிவகாசி சார் ஆட்சியர் பிருத்திவிராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News