உள்ளூர் செய்திகள்

அழகு நிலையத்தில் பணம் திருட்டு

Published On 2023-01-29 07:54 GMT   |   Update On 2023-01-29 07:54 GMT
  • அழகு நிலையத்தில் பணம் திருட்டு நடந்தது.
  • இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய கொள்ளையர்களை தேடி வருகிறார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் சிங்க ராஜா தெருவில் வசிப்பவர் செல்வமீனா. இவர் ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

நேற்று இரவு அவர் வழக்கம்போல் அழகு நிலையத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அழகு நிலை யத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 ஆயிரம், செல்வமீனாவின் தாய், மகளிர் குழுவிடம் இருந்து பெற்று வைத்திருந்த ரூ.10 ஆயிரத்து 600 ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் செல்வமீனா ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய கொள்ளையர்களை தேடி வருகிறார்.

Tags:    

Similar News