உள்ளூர் செய்திகள்

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள்

Published On 2023-01-13 14:11 IST   |   Update On 2023-01-13 14:11:00 IST
  • கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர்.
  • இந்த கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் வடுகப்பட்டி முதல் தெற்குவெங்காநல்லூர் வரையிலான 36 கிலோமீட்டர் தூர பணிகளுக்காக அச்சம் தவிர்த்தான் ஊராட்சியில் கல்குவாரி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விளை நிலங்களுக்கு நடுவே கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பொதுமக்களுக்கு ஆதரவாக அக்கரைப்பட்டி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 193 மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். மேலும் மாணவர்கள் பள்ளி நுழைவு வாயிலில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ''நாங்கள் இன்று ஒரு நாள் வகுப்புகளை புறக்கணிக்கிறோம்'' என்று கடிதத்தை ஒட்டி விட்டு சென்றனர்.

மாணவர்கள் யாரும் வராததால் ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை தாசில்தார் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் மாணவர்களை போராட்டங்களில் ஈடுபடுத்தக் கூடாது, மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன்பின் 110 மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.

Tags:    

Similar News