உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசு கருந்திரி மூடைகள்.

பட்டாசு கருந்திரி பறிமுதல்

Published On 2023-01-21 13:24 IST   |   Update On 2023-01-21 13:24:00 IST
  • அருப்புக்கோட்டையில் 6 டன் பட்டாசு கருந்திரி பறிமுதல் செய்யப்பட்டது.
  • பெண் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் கடந்த சில நாட்களாக தொடர் வெடிவிபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண் காரத் அறிவுறுத்தலின் படி, தனிப்படை அமைக்கப்பட்டு பட்டாசு தயாரிக்க பயன்படும் கருந்திரியை பதுக்கிவைப்பதை தடுக்கும் வகையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சின்னபுளியம்பட்டி, பெரிய புளியம்பட்டி, தெற்கு தெரு, எம்.டி.ஆர். நகர், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு நபர்கள் அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்த 6.15 டன் கருந்திரி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த லோகநாதன் (62), விஜயகுமார் (46), செல்வராஜ் (58), ராமசாமி (68), வீரராஜன் (62), பாலமுருகன் (51), பாண்டி கணேசன் (55) முருகேஸ்வரி (60), கணேசன் (53) ஆகிய 9 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News