உள்ளூர் செய்திகள்

பண மோசடி 3 பேர் மீது வழக்கு

Published On 2022-09-07 08:08 GMT   |   Update On 2022-09-07 08:08 GMT
  • ராஜபாளையம் அருகே பண மோசடி செய்ததாக பள்ளி செயலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
  • அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் சோழபுரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் செயலாளராக ராமர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்த பள்ளியில் கடந்த 24.2.2016 அன்று உடற்கல்வி ஆசிரியராக பானுரேகா என்பவர் பொறுப்பேற்று கொண்டார்.

இவர் மதுரை ஆயுதப்படை போலீசில் பணியாற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஆவார். உடற்கல்வி ஆசிரியராக சேர்ந்த பானுரேகாவுக்கும், பள்ளி செயலாளராக பணியாற்றி வரும் ராமருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 10.22018 அன்று பானுரேகா தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு தலைமையாசிரியர் வீரலட்சுமி என்பவர் மாவட்ட கல்வி அதிகாரி முத்தையாவுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

மோசடி புகார்

இந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் முத்தையா நடத்திய விசாரணையில் கடந்த 24.2.2014 முதல்31.5.2014 வரை பானுரேகா பள்ளியில் பணியாற்றியதாக காட்டி ரூ.51 ஆயிரத்து 500 பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் முத்தையா தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதில் பள்ளி செயலாளர் ராமர், தலைமையாசிரியர் வீரலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் பானுரேகா 3 பேரும் சேர்ந்து இந்த பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News