உள்ளூர் செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்ட செய்த போது எடுத்த படம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-24 14:04 IST   |   Update On 2022-06-24 14:04:00 IST
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

ராஜபாளையம்

மத்திய அரசு அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்திற்கு இளைஞர்களை 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யும் திட்டத்தை கொண்டுவர ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் இத்திட்டத்தை கைவிடக் கோரியும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் ராமர், மாவட்ட செயலாளர் கணேசன், மாநில குழு உறுப்பினர் திருமலை, டாக்ஸி தொழிலாளர் சங்கம் சார்பில் கண்ணன், மாரியப்பன், பிச்சைக்கனி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags:    

Similar News